செவ்வாய், நவம்பர் 22, 2011

ஜங்கார சுருதி செய்குவாய்


ஜங்கார சுருதி செய்குவாய் 
ஜீவ வீணையில் 
சங்கீத அம்ருதம் பெய்குவாய்.





சுத்தானந்த பாரதி இயற்றிய பாடல் இது
சொல்லப்போனால் அம்மாவுக்கு சுத்தானந்த பாரதி இயற்றிய பாடல்கள் அநேகம் தெரிந்து நன்றாகவும் பாடுவார்கள். தமிழும் வட மொழியும் கலந்த இந்த பாடல்கள் அந்த கால சங்கீத வித்வான்கள் இடையே மிகப் பிரசித்தமாக இருந்தன. 

அம்மாவிடம் ஒரு விசேடம் .  அவர் தினம் மாலையில் பூஜை அலமாரியில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கண்டிப்பாக ஒரு பாட்டு படுவார்கள். அந்த பாட்டை வைத்துக்கொண்டே அவர்கள் மூட் என்ன என்று தெரியும்.  எந்த விதமான மன நிலைகள் இருந்தாலும் அதை சங்கீதக் கடலிலே முழுகி அவற்றினை மறந்து, ஒரு புது மன நிலைக்கு வந்து, பாட்டு முடிந்தவுடன், எந்தக் குழந்தைக்கு எது தேவை என்று பார்த்து அதற்க்கு ஏற்றபடி தனது காரியங்களை சரியமைத்துக்கொள்ளும் பாங்கு அவரிடம் இருந்தது.  

எங்க வீட்டுக்காரருக்கு பூர்வி கல்யாணிக்கும் பந்து வராளிக்கும் இருக்கிற வித்தியாசம் துவக்கத்தில் புரிபடவில்லை.  பிற்காலத்தில் எனது நாத்தனாரிடம் நன்றாகவே வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார்.  பூர்வி கல்யாணிக்கும் பந்து வராளிக்கும் ஸ்வரங்கள் ஒன்று தான்.  பிரயோகம் தான் மாற்றம். பாடல் ஆரம்பிக்கும்பொழுதே, இது பூர்வி கல்யாணியா அல்லது பந்து வராளியா என்று தெரிந்து விடும். 
 
அம்மா பந்து வராளியில் அப ராம பக்தி பாடுவார்.  அதை பிறகு போடுகிறேன். 
இப்ப பூர்வி கல்யாணி . பாடுவது நிர்மலா சுந்தர ராஜன். 

Jankara sruti- (Suddhananda Bharati) poorvi kalyani
Jankara Sruti seyiguvaar, jeeva Veenail
Sangeetha mrutham peyiguvaar jagadeeswaranee ,
jankaara…..
ஜங்கார சுருதி செய்குவாய்.
ஜீவ வீணையில் சங்கீதாம்ருதம் பெய்குவாய், ஜகதீஸ்வரனே ! ஜங்கார
Sankara samba saadha siva om hara;
Shambu vena cholli yen janmam kadaitheerave
jankaara…
சங்கர சாம்ப சதா சிவா ஓம் ஹர
சம்பு வெனச் சொல்லி என் ஜன்மம் கடைத் தேற, ( ஜங்கார )
pala pala vennum kaalai paadum pul oosai poolum
paarkadal ullam vinmeen aarkum garjanai poolum
malarkalai konji vaarum mandaamarudham poolum
madhu vunda vandeenam valarkum reengaram poolum.
பல பல வென்னும் காலை பாடும் புள் ஓசை போலும்
பாற்கடல் உள்ளம் விண்மீன் ஆர்க்கும் கர்ஜனை போலும்
மலர்களைக் கொஞ்சி வரும் மந்த மாருதம் போலும்
மது உண்ட வண்டினம் வளர்க்கும் ரீங்காரம் போலும் .. ( ஜங்கார )


http://mio.to/IvER
yOU MAY LISTEN TO ARUNA SAIRAM ALAPANA HERE IN RAAG PURVI KALYANI.
WE CANNOT BUT IMMERSE OURSELVES IN THE GHAMBEERAM IN HER VOICE.

1 கருத்து:

  1. வாவ்! என் பாட்டி பாடிக் கேட்டது!
    எத்தனையோ வருஷ நினைவைக் கொண்டு வந்தீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு