புதன், மார்ச் 14, 2012

Shanmughapriya


அம்மா சொல்வார்கள். அவர்களுக்கு வயது பத்தி மூன்று ஆவதற்கு முன்பாகவே திருமணம்  ஆகிவிட்டது. அதற்கு பிறகு அவர்கள் தமது தாய் தந்தையரை போய் பார்த்தார்களா ? அவர்களுக்கே நினைவு இல்லை.  அந்த காலத்தில் திருமணம் ஆகி வந்து விட்டால், அதற்குப்பின்னே கணவனுடைய குடும்பத்தில் சங்கமம் . அவர்கள் வைத்தது தான் சட்டம், நீதி, நியாயம் எல்லாம்.
எப்போவாவது வீட்டில் நல்லது, கேட்டது நடக்கும் போது அம்மாவின் தந்தை தாய் வருவார்களாம். அதுவும் அவர்கள், நான் பிறக்கும் முன்னாடியே ( 1942 ) காலம் ஆகிவிட்டதாக சொல்வார்கள். அதனால், பிறந்த வீடு என்று ஒன்று அவர்களுக்கு ஆதரவாக இருந்தது என்றே சொல்ல முடியாமல் தான் இருந்தது.

நான் ஒரு தடவை, ஒரே ஒரு தடவை, எனது பெரிய மாமாவைப் பார்த்திருக்கிறேன்.  அவர் மைசூரில் டாக்டர். எங்க அம்மாவைப் பாக்க வந்தபோது அம்மாவுக்கு ஜுரம் . அதற்கு மருந்து எழுதிகொடுத்து வாங்கி வந்தது நினைவு இருக்கிறது. சின்ன மாமா பர்மா ஷெல் கம்பெனி யில் பெரிய உத்தியோகம். அவரை நான் பார்த்து இருக்கிறேன்.  என்னவோ, அவர்களைக் கண்டாலே, என் அப்பாவுக்கு பிடிக்காது.  அதனாலேயோ என்னவோ, அவர்களும் வருவதும் கிடையாது.  அவர் வரும்போதெல்லாம் எனக்கு தமிழில் ஒரு டிக்டேஷன் தருவார். இவ்வளவு சுத்தமாக, ஸ்பெல்லிங் எல்லாம் சரியாக இருக்கிறதே ! வல்லினம், இடையினம், எல்லாம் எப்படி சரியாக இந்த வயசிலே போடுகிறாய் என்று அவர் என்னிடம் கேட்டது நினைவு இருக்கிறது. அப்போது எனக்கு வயது ஏழு. நம்ப மாட்டீர்கள். நான் அப்போது நாலாவது படித்துகொண்டு இருந்தேன்.  ( பதிமூன்று வயதிலே நான் எஸ்.எஸ்.எல்.சி) முடித்து விட்டேன். என்னவோ, அவர்களைக் கண்டாலே, என் அப்பாவுக்கு பிடிக்காது.  அதனாலேயோ என்னவோ, அவர்களும் வருவதும் கிடையாது

என் அம்மாவுக்கு ஒரு அக்கா இருந்தார்கள். பக்கத்தில் ஒரு கிராமம். அப்பப்ப வருவார்கள். அவர்கள் வந்தார்கள் என்று தெரிந்து விட்டாலே என் அப்பாவுக்கு அப்படி ஒரு கோபம் வரும்.

இப்படி புகுந்த வீட்டின் எதிரியாக கருதப்படும் பிறந்த வீட்டைப் பற்றி அம்மா என்ன நினைத்துகொண்டு இருப்பார் ?

மனைவியின் பிறந்த வீட்டை துச்சமாக மதிப்பது என்பது தான் கெளரவம் என்று நினைத்துகொள்ளும் ஒரு சமூக நிலை அப்போது  இருந்து இருக்ககூடும்.
அம்மா பல தடவைகள் இந்த பாட்டை  பாடி இருக்கிறார்கள்.
அம்மா அப்பா என்று இல்லாத ஒருவரின் மன நிலை எப்படி இருக்கும் என்பதைச் சித்தரிக்கும் பாடல்.
சிவனைக்குறித்து பாடும் இந்த பாடல், எந்த அனாதைக்குமே பொருந்தும். 
தந்தை தாய் இருந்தால், உமக்கு இந்த  தாழ்வெல்லாம் வருமோ ஐயா ?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக