வெள்ளி, டிசம்பர் 16, 2011

Saveri.

எங்க அம்மாவுக்கு சங்கீதம் தெரிந்த அளவுக்கு எங்க அத்தை மார்களுக்கு அவ்வளவு ஞானம் போதாது. ஏதோ பாடுவார்கள் . அவ்வளவு தான். இருந்தாலும் அது தெரியும், இது தெரியும் என்று பீத்தி கொள்வதிலே அவர்கள் எப்பவுமே முந்தி .

சில சமயம் அம்மா, சரிதாண்டி உனக்கு இவ்வளவு தான் தெரியும் என்று போய் விடுவார்கள்.  ஆனால், அப்பாவோ சில சமயம் நீ சொல்றது தப்பு அப்படின்னும் சொல்லி விடுவார்கள். இது போல பல சமயம் இந்த ராகங்கள் விஷயத்தில் தான் வரும் என்று என் கணவர் கூறுவார்.  இது ஆரபியா தேவ காந்தாரியா ? பைரவியா, முகாரியா ?, பூர்வி கல்யாணியா இல்லை பந்து வராளியா என்றுதான் ஆரம்பிக்கும், ஆனால் கடைசியில் நிஜமாகவே சண்டை வந்து விடும்.

இந்த நாத்தனார்கள் அடிக்கடி வந்து அப்பா மனசை கலக்கறது அம்மாவுக்கு பிடிக்காது.  அப்ப, சூசகமா சொல்ற மாதிரி, ஒரு பாட்டை எடுத்து போடுவா பாருங்கோ.  கேட்பவர்க்கு, அம்மா பாட்டு பாடறா மாதிரி தான் தோன்றும். ஆனா யாருக்கு விஷயம் போகணுமோ அவர்களுக்கு நன்றாக உறைக்கும்படி
இருக்கும்.

 அது போலத்தான், ஒரு தடவை இந்த பாட்டையும் எங்க அம்மா பாடி தான் கேட்டதாக எங்க வீட்டுக்காரர் சொல்வார்.

ராகம் சாவேரி. சுப்பராம ஐயர் இயற்றியது என்று சொல்வார்.

நீங்க கேட்பது மல்லாரி சகோதரர்கள் பாடுவது. கொஞ்சம் மாத்தி பாடுவது போல இருக்கிறது.






எங்க அம்மா சாவேரி ராகத்தில் பாடுவது இந்த மெட்டில் ராகம் அதே சாவேரி தான்.
http://www.vasumathi.net/small_mp3/tamilpadam/ethani.mp3



எத்தனை சொன்னாலும் தெரியாதவருடன் ஏன் பிணக்கிக் கொள்வாய் மகளே ?
அத்தனை அளித்த குமரேசர் வைதாலும் என்ன ஆத்திரப்படுகிறாய் பெண்

அன்புள்ளபோதே கோபமும் இருக்கும் மேன்மேலே 


ராமாயணம் கேட்டுமாப்பாய் ராமனுக்கு சீதை என்ன முறை என்றது போலே


கொண்டவர் நயத்திலும் பயத்திலும் சொல்வார். 
கொண்டையை போட்டுகொண்டு போனது ஏனடி
 சண்டை உனக்கு இப்போ பாலும் பழமும் அடி குடி கேடி 

தாய் பெறேடுப்பாய் வெகு நேர்த்தி ஆகவே தன 


மீன விழியாலே உனக்கு இந்த துடுக்கு 


நானொருத்தி இதற்கெல்லாம் போடா விட்டாய் தடுக்கு 

நானும் ஒரு பெண் என்று நீ குலுக்கு வாய் அடக்கு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக