புதன், டிசம்பர் 14, 2011

Raag Sama


இன்று என் அன்னையின் நினைவு தினம். தான்  இறந்த பின் தனக்கு  எந்த விதமான கர்மாக்களும் செய்யவேண்டாம். அன்று இரண்டு ஏழை குழந்தைகளுக்கு அன்னம் அளியுங்கள் . அது போதும். அதுவே எனக்கு திருப்தி என்று சொன்ன உன்னத ஆன்மா எங்கள் அன்னை.  திதி, ஸ்ரார்த்தம் என்று அந்த தினத்தில் வெவ்வேறு தின்பண்டங்களை வயிறு புடைக்க தின்று, ஏதோ நாம் அறியாத மொழியிலே சொல்லும் மந்திரங்களிலே என் அம்மாவுக்கு அவ்வளவு நம்பிக்கை எப்பொழுதுமே இருந்ததில்லை.

நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் என்பார்கள்.

நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டை இடும்போதெல்லாம் அவர் மனம் நொந்து போவார். எதனை சொன்னாலும் தெரியாத மூடருடன் என்ற பாட்டை பாடுவார். வீட்டிலே அமைதி இருக்கவேண்டும் அப்பொழுது தான் உபயோகம் உள்ள காரியங்கள் செய்ய முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நம்ப யாருக்காவது உருப்படியா ஒரு நல்ல காரியம் செய்யணும் அப்படின்னு நினச்சா நம்ப மனசு சாந்தமா இருக்கணும்.  அமைதி இருக்கற மனசுலே தான் நல்ல எண்ணங்கள் தோணும் அப்படின்னு அவர் அடிக்கடி சொல்லுவார்.

வீட்டிலே பெரிசா ஏதேனும் சண்டை, சச்சரவு, மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டால், அவர் அன்று மாலை கண்டிப்பாக இந்த பாட்டு தான் பாடுவார் என்று எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்.   அப்படி அவர் இன்னமும் பாடவில்லையே,  மணி ஆறு ஆகிவிட்டதே என்றால், என் தங்கை அதை நினைவு படுத்துவது போல என்ன அந்த சாந்த மூலேகாவை இன்னும் காணோம்  அப்படின்னு எடுத்து கொடுப்பாள்.
அந்த பாடலை இன்று நாம் எல்லாம் கேட்போம்.  இங்கே கிளிக்கினால் நித்ய ஸ்ரீ மகாதேவன் பாடுவதை கேட்கலாம்.

பானுமதி ஒரு திரைப்படத்துக்காக பாடுவது இங்கே.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக