சனி, டிசம்பர் 17, 2011

suddha seemanthini

ஜானகி ரமண பக்த பாரிஜாத ....

 என்ன அற்புதமான கீர்த்தனை !!  அம்மா !! ரொம்ப நன்றாக இருக்கிறதே!! இது என்ன ராகம் என்று ஒரு நாள் என் அம்மாவிடம் கேட்டேன்.

 எங்க அம்மா நன்றாக பாடுவார்கள். . சுருதி சுத்தமாக இருக்கும். (தாளம் சரியாக இருக்காது என்று என்னுடைய விதுஷி  தங்கை சொல்வாள். அது வேற விஷயம் ) அந்த காலத்தில் அதாவது 1920 ல் பிறந்த எங்க அம்மா அன்றைய நாளில் தியாகராஜா கீர்த்தனைகள் பாடும் அல்லது பாடப்படும் மெட்டுக்களில் பாடுவார். மெட்டு என்று நான் சொல்வது பாணி. இப்பவே பார்க்கிறோம் ஒரே ராகம் ஒரே கீர்த்தனை அதை எம். எஸ். அம்மா பாடுவது ஒரு மாதிரி. அதையே பாலா முரளி கிருஷ்ணா பாடுவது இன்னொரு மாதிரி.  அதையே ஒரு சினிமாவில் எஸ்.பி. பால சுப்பிரமணியம் பாடும்பொழுது எப்படி இருக்கிறது !  எல்லாம் நன்றாக இருக்கிறது.  இருந்தாலும் பாடும் பாணி, அங்கங்கே கமகம், பிருகா எல்லாம் வித்தியாசப்படும். அதனால் தான் என்னவோ, எனக்கு அவர் பாடினா புடிக்கும் என்று சொல்கிறோம்.  இன்னிக்கும், தோடி ராகமா !! தாயே யசோதா மதுரை மணி பாடணும் கேட்கணும் என்று சொல்கிறோம் இல்லையா !!

அது போலத்தான் இந்த ஜானகி ரமண பாடல். சுத்த சீமந்தினி ராகம். எதேச்சையாக என் அம்மா பாடும் பாணியிலேயே ஒரு வித்வான் பாடுகிறார்.
கேட்போமா !!

8 hanumatODi janya
Aa: S R1 G2 M1 P D1 S
Av: S D1 P M1 G2 R1 S











பல்லவி

ஜானகி ரமண பக்த பாரிஜாத பாஹி சகல லோக சரண

அனுபல்லவி

கான லோல கனடமால கருணாலவால  சுகுனஷீலா


caraNam

rakta naLinadaLa nayana nrpAla ramaNIyAnana mukura kapOla
bhakti hInajana madagaja jAla panca vadana tyAgarAjapAla
(jAnakI)

Meaning:
pallavi: Lord of Janaki! You are tha divine kalpaka tree of your devotees as you readily grant everyone of their wishes. You are the refuge of all beings in the cosmos.

anupallavi: You are delighted by music. You are the matchless beauty with the green hue of tender leaves. You are the reservoir of compassion and of spotless conduct.

caraNam: You are the possessor of eyes like the petals of a red lotus. O King! O Beautiful faced! Mirrorlike cheeked! To men who have no spark of devotion in them and who wander about intoxicated with power and arrogance like an elephant running amok, you are the saviour.
Courtesy: www.karnatik.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக