வெள்ளி, ஜனவரி 13, 2012

சுருட்டி


என்னுடைய கடைசி மைத்துனர் எங்களை விட சுமார் பதினைந்து வயது இளையவர் , அவரிடம் எங்க வீட்டுக்காரர் அம்மா பாடிய பாடல்களில் உனக்கு நினைவு இருப்பதை எல்லாம் என்னைக்குத் தெரிவிப்பாயா என்று கேட்டு இருந்தார். அதற்கு பதிலாக அவர் எழுதிய பதில் இவரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.  ஏன் எனின், இந்த பாட்டு எப்படி ஏன் நினைவுக்கு வராது போனது என்றே !!
சுருட்டி ராகப்பாடல் இது.



சரணம் சரணம் ரகுராமா நின் சரணம் என்ற பாடல் எங்க அம்மா பல தடவைகள் பாடக் கேட்டு இருக்கிறேன் அருணாச்சல கவிராயர் பாடிய இந்த பாடல் மனதை உருக வைக்கும். அருணாச்சல கவிராயர் எழுதிய ராம நாடகத்தில் இருந்து பல பாடல்கள் அந்த காலத்தில் மிக பிரசித்தம்.


னக்கு வேற வழியே இல்லை. நீதான் எனக்கு திசை காட்ட வேண்டும் என்று ராமனை இறைஞ்சும் பாடல் அல்ல பிரேயர் இது எங்க அம்மா வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல சொல்லி மாளாது. அத்தனை போதிலும் அமைதி காத்து நெஞ்சில் உரம் கொண்டு அத்தனை குழந்தைகளையும் பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்த உன்னத தாய் அவள்.

கஷ்டம் படும்போதேல்லாம் அந்த ராமன் தான் துணை நின்றானோ !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக