வெள்ளி, மார்ச் 02, 2012

VACHASPATHI

பராத் பரா பரமேஸ்வரா ,
பார்வதி பதே ஹரே பசுபதே  என்னும் பாட்டு என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தான் சொல்லவேண்டும்.  எப்ப பார்த்தாலும் இந்த பாட்டு தான்.

இதன் அனுபல்லவியிலோ சரணத்திலோ சூரா சூரா என்று வரும். அந்த வார்த்தைகள் சரியாய் சொன்னால் சூரா அசுரா ..அப்போது சூரி என்று அழைக்கப்பட்ட என்னை ஒரு கண் பார்ப்பார்கள். அது நன்றாக நினைவு இருக்கிறது.  அது என்னவோ தெரியவில்லை, அடுத்த வார்த்தை தொழும்  பாவனா என்று சொல்லும்போது ஆபீஸ் ரூம் பக்கம் அவர்கள் கண் போகும்.  அங்கே தான் என் அப்பாவின் ஆட்சி .  அவர்கள் அட்வகேட் . எப்ப பார்த்தாலும் கட்சிகாரர்கள், கேஸ் என்று சாயந்திரம் முதல் இரவு பத்து மணி வரை அதிலேயே ஈடுபட்டு இருப்பார்கள்.
அம்மாவுக்கு பதிமூணு வயதிலே திருமணம். அம்மாவோட அப்பா எஞ்சினீர் ஆக மைசூரில் இருந்தாராம். தியாகராஜ ஐயர் என்று பெயர்.
நேற்று அல்லது முந்தா நாள் , விஜய் டி. வி. லே. சூர்யா நிகழ்த்தும் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்டார்கள்.  எஞ்சிநீர்ஸ் டே என்று கொண்டாடப்படுவது யாருடைய நினைவாக என்று.  அந்த கேள்விக்கு எனக்கு உடனே பதில் தெரியும்.  ஏன் என்றால், என் அம்மா சொல்லியிருக்கிறார்.  அந்தக் காலத்திலேயே விஸ்வேஸ்வரய்யா விடம் சேர்ந்து கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கட்டுக்கு உங்க தாத்தாவும் பாடு பட்டு இருக்கார் டா. என்று.
எங்க தாத்தா தியாகராஜா ஐயர் ( தாய் வழி தாத்தா ) அந்த கால சிவில் எஞ்சினீர். அப்ப எல்லாம் டிப்ளமா படிப்பு தான்.  நான் சொல்வது 1910 - 1920 லே .  பிற்காலத்திலே தான் பி. இ. படிப்பெல்லாம் வந்தது. தாத்தா தன மூத்த பையனை டாக்டர் ஆக்கினார். அந்த காலத்து எல். எம்.பி.

1956 ம வருடம் அப்ப எங்க அம்மாவுக்கு டை பாய்ட் வந்த போது செய்தி கிடைத்து அவர் மைசூர் இல் இருந்து வந்து மருந்து பொட்லம், மிக்சர் எல்லாம் வாசன் மெடிகல் லேந்து வாங்கிண்டு வந்து கொடுத்தது இன்னும் நினைவு இருக்கிறது.   கூடப் பிறந்த பாசம் ரொம்ப ஜாஸ்தி.  எங்க அப்பாவுக்கு அம்மா பிறந்தாத்து மனுஷாளைக் கண்டாலே பிடிக்காது.  இதெல்லாம் அந்த காலத்து கதை.

இப்ப பாட்டை கேட்போம்.

எம். எஸ். அம்மா பாடுவதை கேட்கும்போது இன்னொன்றும் நினைவு வருகிறது. என் தங்கை ராஜேஸ்வரி என்று பெயர்.  எங்க அப்பா சொல்லுவார், நீ தான் அடுத்த எம். எஸ். என்று என் தங்கையிடம். அத்தனை சாரீர துல்யம்.
இப்போது 66 வயது ஆகிறது. இருந்தாலும் சாரீரத்தில் சுத்தம் அதுல்யம். ஒரு கால கட்டத்தில் என் தங்கை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார். ரேடியோ ஆர்டிஸ்ட் என் தங்கை என்று சொல்லிகொள்வதில் எனக்கொரு பெருமை.   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக