திங்கள், நவம்பர் 07, 2011

என் மாமியாருக்குப் பிடித்த பாடல்கள்

முதற்கண் எனது மாமியார் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

அவரை எனது மாமியார் என்று சொல்வதுகூட தவறு. என்னைப் பெற்ற அன்னையை விட என்னிடம் அன்பாக இருந்த ஒரு புனித அம்மா. 

அவர்கள் இப்போது இல்லை. எனக்கே எழுபது வயதாகிறது. அவர்கள் இருப்பது பௌதீக சாத்தியம் இல்லை.  இருப்பினும் அவர்களை எப்பொழுதும் நான் நினைத்துக்கொண்டே இருப்பேன். 

ஏன் எனில் அவர் ஒரு கடல். 
அன்புக்கடல்.  
நீர் தேடி வரும் பறவைகள் அனைத்துக்கும் புகல் தரும் வேடந்தாங்கல் போல் அவர் ஓர் சரணாலயம். 
அதற்கு மேல் அவர் ஒரு சங்கீதக் கடல். 
தமது பதினிரண்டு  வயதிலேயே மூன்று முடிச்சுடன் கணவன் வீடு புகுந்த அந்த அம்மையார் முறையாக சங்கீதம் கற்றுகொண்டது இல்லை என்றுதான் எனது நாத்தனார் திருமதி ராஜேஸ்வரி கூறுகிறார்.  இருப்பினும் அவர்களது சங்கீத ஞானம் கடல் ஆழம் போல. அவரது குரல் வளம் இதயத்தை ஈர்த்தது.
அவர் பாடி நான் மகிழ்ந்த நாட்கள் பல. அவர் போல பாடவேண்டும் என்ற அவா என்றைக்குமே உண்டு. 
அவர் தன வாழ் நாட்களில் பாடிய பல கீர்த்தனைகளில் , பல கீதங்களில், பல பாரதியார் பாடல்கள் இன்னமும் என் காதுகளில் ஒலித்த வண்ணமாக இருக்கின்றன. 
அவர் நினைவாக இந்த வலைப்பதிவு துவங்கி இருக்கிறேன். 
அவருக்குப் பிடித்த பாடல்களை, வரிசையாக பதிவு இட ஆசை. அவா. 
இன்று முதல் துவக்கம். 
எதில் துவங்குவது ? 
 அடாணா ராகத்தில் நீ இரங்கா எனில் புகழ் ஏது?
திருமதி சுதா ரகுநாதன் பாடுகிறார். கேளுங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக