செவ்வாய், நவம்பர் 15, 2011

தன்யாசி

எனக்கென்ன மனக்கவலை ? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை !!
ஒரு சவலை குழந்தை பாடுகிறது போன்ற இப்பாடல் எனது அம்மா அடிக்கடி பாடுவார். (ஞாபகம் இருக்கட்டும், அம்மா என்று சொல்வது என் மாமியாரை )
என் அம்மா இதை ஏன் அடிக்கடி பாடுகிறாள் என்று அவளிடமே ஒரு நாள் என் கணவர் அவளிடம் கேட்டு இருக்கிறார்.

அவர் சொன்னாராம்.
"சூரி !!
கவலை இல்லாமல் ஒரு மனிதனால் இருக்கவே முடியாது.  மனம் என்று ஒன்று இருந்தால் அதில் கவலை உள்ளே இருக்கத்தான் செய்யும். சில சமயம் அது முகத்தில் தெரியும். பல சமயங்களில் அது உள்ளேயே உறங்கி கிடக்கும். எது எந்தக் கவலையாக இருந்தாலும், அடுத்தது என்ன்ன செய்யவேண்டும் என்ற நினைப்பிலே புகுந்து விட்டால், கவலைகள் மறக்க வில்லை என்றாலும் ஓரளவுக்கு மறைந்து போகும், அப்போதைக்கு.
வாட் நெக்ஸ்ட் அப்படி என்று ஒரு கேள்வியை அப்பைக்கப்ப மனதில் எழச்செய்தால் கவலையின் தீவிரம் குறைந்து போகும். "


தன குழந்தைகளுக்கு 1950 லே சொன்ன பாடம் இது. என் கணவர் இன்னமும் நினைவு வைத்துகொண்டு இருக்கிறார்.

அவர் பாடும் தன்யாசி ராகப்பாடலை நான் பாடல்க் கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக