வியாழன், நவம்பர் 10, 2011

En Palli Kondeerayya - Maharajapuram Santhanam - Mohanam

மோகனம் ராகம் என் மாமியாருக்கு மிகவும் பிடித்திருக்கவேண்டும். மாலை நேரங்களில் மோகன ராகத்தில் தன பாட்டுக்கு பாடுவார்கள்.  மாலை நேரம் ஆகிர்விட்டது என்றால்,  வீட்டில் பட்டாசில் ஒரு பூஜை அலமாரி உண்டு. அதில் குத்து விளக்கு ஏற்றி வைத்து விட்டு ஒரு பாட்டு பாடி சுவாமிக்கு
நமஸ்காரம் செய்துவிட்டு தான் அடுத்த வேலை கவனிப்பார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் இந்த ருடினை விட்டு விலகியதே இல்லை. எனக்கு நேரம்மில்லை, எனக்கு இன்று முதுகு வலி, வேற வேல நிறைய இருக்கு அப்படி எந்த சால்ஜாப்பும் சொல்லாம, நம்முடைய கல்ச்சர் எனச் சொல்லப்படும் சம்பிரதாய வழக்கங்களை, அடுத்த தலை முறைக்கு, எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாம சொல்லி கொடுக்கும் அவர்கள் ஒரு முன் மாதிரி ஆக இருந்தார்கள்.

அருணாச்சல கவிராயர் இயற்றிய இராம நாடக பாடல்கள் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தம். அதுவும் இந்த மோகன ராகப் பாடல் இன்றும் எல்லா பாடகர்களும் பாடுகிறார்கள்.  இந்த பாடலை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாடித்தான் எங்க மாமியார் கேட்டிருப்பார் என நினைக்கிறேன்.
இங்கே
மகாராஜபுரம் சந்தானம் பாடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக